20ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால்? செய்தியாளர் சூடான கேள்வி! ஷாக்கான டிடிவி!

20 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்கிற செய்தியாளர் கேள்வியால் டிடிவி தினகரன் ஷாக் ஆனார்.


சென்னையில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 500 ரூபாய் ,1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கபட்ட போது மக்கள் வருந்தமடைந்தார்கள். 20 ரூபாய் நோட்டு செல்லாது என் அறிவிக்கபட்டால் நீங்கள் வருத்தபடுவீர்களா என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.  

அதற்கு 6000 ரூபாய் கொடுத்தவர்களை விட்டு விட்டு எங்களை கேள்வி கேட்பதேன் என பதிலளித்தார். அப்படி என்றால் 20 ரூபாய் கொடுத்ததை ஒப்பு கொள்கிறீர்களா என்று செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.   

ஓட்டு போட்ட ஆர்.கே.நகர் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள் என்று காட்டமாக டிடிவி பதில் அளித்தார. அதுமட்டும் அல்லாமல் நீதிமன்றமே நாங்கள் பணம் கொடுக்கவில்லை என கூறிவிட்டது என்றும் விளக்கம் வேறு அளித்தார்.

ஆர்.கே.நகர் சென்றால் தான் 20 ரூபாய் நோட்டை காட்டுகிறார்கள் என்றால் செய்தியாளர் சந்திப்பிலுமா என்று தினகரன் உடன் வந்தவர்கள் பேசிவிட்டு சென்றனர்.