3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்லி! பேராசிரியை குடும்ப தலைவியின் அற்புத கண்டுபிடிப்பு!

இட்லியை 3 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் புதிய முறையை மும்பை பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.


மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியாக பணியாற்றுபவர்  வைஷாலி பம்போல். இவரது பேராசிரிய மூளையுடன், குடும்பத் தலைவி மனப்பான்மையும் இணைந்த சிந்தனையில் உருவானதுதான் குறிப்பிட்ட சில உணவு வகைகளை மூன்றாண்டுகள் வரை கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம்

 

வேகவைத்து சமைக்கும் உணவுப் பொருள்களான இட்லி, உப்புமா மற்றும் வடமாநில உணவுப் பொருளான வெள்ளை தோக்லா ஆகியவற்றை 3 ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் இவர்.

 

எனினும் இதில் வேதித் தன்மையோ, உடல் நலனைக் கெடுக்கும் அபாயகரமான கலவைகள் ஏதுமோ இல்லை என்று கூறுகிறார்இதனைக் கண்டுபிடிக்க 15 ஆண்டுகளைச் செல்விட்டதாகக் கூறுகிறார்

 

வைஷாலி. உணவுப் பொருட்களின் ஆயுளை அதிகரிக்க சிறப்புத் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்த பேராசிரியை வைஷாலி, இது நடைமுறைக்கு வந்தால் உணவுத்துறையில் பெரும் புரட்சி ஏற்படும் என்கிறார்

 

அதுமட்டுமா இயற்கை பேரிடர்களின் போது இந்த தொழில்நுட்பம் மிகப் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் கூட மிகவும் பயன் மிக்கதாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. 

கால மாறுதலும், சூழ்நிலைகளும் புதிய திறமையாளர்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்குகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு உணவுத்துறையில் புரட்சியை உருவாக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.