இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுதைலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று முன் தினம் பாகிஸ்தான் எல்லைக்குள் அபிநந்தன் அந்நாட்டு ராணுவ வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்தது.

இதனை அடுத்து அபிநந்தனை விடுதலை செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்தார். நல்லெண்ண நடவடிக்கையாக அபிநந்தன் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் நாளை (இன்று) அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இம்ரான் கான் கூறினார்.

இதனை தொடர்ந்து இன்று அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.