ஹைதராபாத் பெண் டாக்டர் உடலுக்குள் மது..! பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்!

ஐதராபாத்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டியின் உடலில் ஆல்கஹால் இருந்ததை, தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.


ஐதராபாத் பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி (26 வயது) கடந்த நவம்பர் 27ம் தேதியன்று, தோண்டுபள்ளி சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கடத்தப்பட்டார். அவரை லாரி டிரைவர் ஒருவரும், அவரது உதவியாளர்களும் சேர்ந்து கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மது ஊற்றி கொடுத்துவிட்டு, போதையில் இருந்த பிரியங்காவை பலாத்காரம் செய்து, பின்னர் அடித்துக் கொன்றுள்ளனர்.

அத்துடன் விடாமல் சடலத்தை சாலையோரம் வீசி, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை என்கவுன்டர் செய்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை விசாரித்தபோது, பிரியங்காவுக்கு மது ஊற்றி கொடுத்ததாக ஒப்புக் கொண்டனர்.

அதன்பேரில், தடயவியல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பிரியங்காவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்தபோது, அதில், ஆல்கஹால் கலந்திருப்பதற்கான சுவடுகள் கிடைத்தன. இதையடுத்து, அவர் மது குடிக்க வைத்த பிறகே, பலாத்காரத்திற்கு ஆளானார் என்பதை தடயவியல் போலீசார் உறுதிப்படுத்தி, தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

'போதையில் இருக்கும்போதே, பிரியங்காவை பயங்கர ஆயுதங்களால் அடித்துள்ளனர். அப்போதே அவர் உயிரிழந்துவிட்டார், ஆனாலும் அவரை விடாமல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு, சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்,' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.