வீட்டில் கள்ளக் காதலனுடன் தனிமையில் இருந்த தாய்..! நேரில் பார்த்து கதறி அழுத 8 வயது மகன்..! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

ஐதராபாத்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.


ஐதராபாத்தில் உள்ள மெயிலர்தேவ்பள்ளி பகுதியில் வசிப்பவர் சுல்தானா. தினக்கூலி வேலை செய்யும் இவர், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவரை பிரிந்து, தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். இதில், 2வது ஆண் குழந்தைக்கு, 8 வயது. அம்ஜத் எனப் பெயரிடப்பட்ட அந்த சிறுவனுக்கு பிறவியிலேயே உடல் ஊனம் இருந்துள்ளது. எனவே, அச்சிறுவனால் நடக்க முடியாது. மாற்று திறனாளியாக இருந்தாலும், கஷ்டப்பட்டு, 2ம் வகுப்பை அம்ஜத் படித்து வந்துள்ளான். தினசரி வேலைக்குச் சென்று, 3 குழந்தைகளையும் காப்பாற்றி வந்த சுல்தானாவுக்கு, அதே பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் என்ற ஆட்டோ டிரைவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.  

இதனால், அடிக்கடி இரவு நேரத்தில் சுல்தானாவை சந்திப்பதை இஸ்மாயில் வாடிக்கையாகச் செய்து வந்திருக்கிறார். இதன்படி, கடந்த டிசம்பர் 22ம் தேதி இஸ்மாயில் சுல்தானா வீட்டில் இருந்தபோது, சம்பந்தப்பட்ட சிறுவன் அம்ஜத் சத்தம் போட்டிருக்கிறான். அவனது சத்தத்தால் ஆத்திரம் அடைந்த சுல்தானா, அக்கம் பக்கத்தினருக்கு விசயம் தெரியாமல் மறைக்க முயன்றுள்ளார். எனவே, சுல்தானாவும், இஸ்மாயிலும் சேர்ந்து, சிறுவன் அம்ஜத்தை வீட்டின் சுவரில் வேகமாக இடித்து தள்ளியுள்ளனர்.

இதில் சிறுவனுக்கு மார்பு, தலையில் அடிபட்டு, அங்கேயே மூர்ச்சையாகி, உயிரிழந்தான். இதையடுத்து, தவறை மறைக்க சுல்தானா, உடல்நலக் குறைவால் சிறுவன் இறந்ததைப் போல நடிக்க, சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.  

போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றபோது, சிறுவன் இறந்து கிடந்ததை உறுதி செய்தனர். உடனடியாக, கொடூர தாய் சுல்தானாவை கைது செய்தனர். அதேசமயம், கள்ளக்காதலன் இஸ்மாயில் தப்பியோடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.