ஐதராபாத்: மெட்ரோ ரயில் நிலையத்தில் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்கிரீட் இடிந்து தலையில் விழுந்தது! துடிதுடித்து பலியான மவுனிகா! மெட்ரோ ரயில் நிலைய பயங்கரம்!

ஐதராபாத் மெட்ரோ ரயில் பாதையில் உள்ள அமீர்பேட் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு கனமழை காரணமாக, பாதசாரிகள், மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி பாதுகாப்பிற்காக, தஞ்சமடைந்துள்ளனர்.
அப்போது திடீரென கான்கிரீட் கூரையின் மேற்பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் மவுனிகா என்ற பெண் தலையில் படுகாயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி எஸ்ஆர் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.