ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கிணற்றுக்குள் மருத்துவக் கல்லூரி மாணவரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்புறம் கட்டப்பட்ட கைகள்..! மடக்கப்பட்ட கால்கள்! விவசாய கிணற்றில் சடலமாக மிதந்த எம்பிபிஎஸ் மாணவர்! பதற வைக்கும் சம்பவம்!

தெலுங்கானா மாநிலம், ஜெயாஷங்கர் பூபலபள்ளி மாவட்டத்தில் உள்ள கனிபார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தும்மனபள்ளி வம்ஷி. இவர், கம்மம் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் (மகர சங்கராந்தி) விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஆனால், அதன்பின் அவர் எங்கே போனார் என்ற விவரம் எதுவும் கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதன்பேரில் பல முறை அவரது செல்ஃபோனுக்கு தொடர்புகொண்டாலும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, இதுபற்றி வம்ஷியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, கனிபார்த்தி கிராமத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் வம்ஷியின் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தில் எந்த காயமும் இல்லை என்பதால், அவர் எப்படி இறந்தார், ஒருவேளை தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.