ஒரு பெண்! ஒரே பிரசவம்! அடுத்தடுத்து ஜனித்த 4 குழந்தைகள்! அதிர்ச்சியி ஆழ்ந்த மருத்துவர்கள்!

இந்தியாவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.


ஐதராபாத்தின் சிக்கலகுடா என்ற இடத்தில் கடந்த 2-ஆம் தேதி ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் அங்கு உள்ள கீதா நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது.

முதலில் வலியெடுத்து அந்தப் பெண் கத்திய போது ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் அதற்கு எடை குறைவாக இருந்த நிலையில் அதற்கான வைத்தியம் குறித்து மருத்துவர்கள் யோசித்துக்கொண்டிருந்த போது மீண்டும் வலியெடுத்து அந்தப் பெண் அலற இரட்டைக் குழந்தை போலும் என எண்ணி அந்தப் பிரசவத்தையும் மருத்துவர்கள் முடித்தனர். 

இதனைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கு மட்டுமன்றி அந்தப் பெண்ணுக்குமே அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படும் வகையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளுமான  அந்த 4 குழந்தைகளும் தலா ஒரு கிலோ எடை மட்டுமே கொண்டவையாக இருந்தன.

எடைக் குறைவுடன் இருந்த குழந்தைகளும் சத்துக் குறைவுடன் இருந்த தாயும் மேல் சிகிச்சைக்காக ஐதராபாதில் உள்ள பிரபல மருத்துவமனையான  நியோ பி.பி.சி. மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதுதான் இந்த விவரம் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. தற்போது தாயும் சேய்களும் நலம் என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், மிகவு அரிதாக 7 லட்சம் பிரசவங்களில் ஒன்றில் இது போன்று 4 குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.