அதி பயங்கர ஸ்பீடு..! பாலத்தின் மீது பறந்து இளம் பெண்ணை நசுக்கிய சிவப்பு கார்! பதைபதைப்பு சம்பவம்!

ஐதராபாத்: அந்தரத்தில் வேகமாக பறந்து சென்ற கார் விழுந்ததில் பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


ஐதராபாத்தில் உள்ள கச்சிபோலி ஐடி காரிடார் சாலையில் உள்ள பயோடைவர்சிட்டி பார்க்  அருகே சனிக்கிழமை பிற்பகலில் கார் ஒன்று மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து சென்று, கீழே விழுந்து நொறுங்கியது.

இதில், பாலத்தின் கீழே நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் தவிர காரை ஓட்டிச் சென்ற டிரைவர் மற்றும் காரில் இருந்த ஒரு பெண் பயணியும் இதில் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்த சத்யம்மா என்ற அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஐதராபாத் மேயர் போந்து ராம்மோகன் அறிவித்துள்ளார்.  

100 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்து ஏற்பட முக்கிய காரணம் என போலீசார் தெரிவிக்கின்றனர். 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலே பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.