நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்! பெண் டாக்டர் கொலையாளியின் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களின் பெற்றோர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.


இதில் அனைவருமே குடிபோதைக்கு அடிமையானர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. 

பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைதான 4 பேர் வீட்டிற்கு செய்தியாளர் குழு தகவல்கள் சேகரிக்க சென்றுள்ளது. இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சிவா, சின்ன கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் இருந்து சுமார் 160 கிமீ தூரத்தில் வசிப்பவர்கள். இதில் ஒருவரின் தாய், தந்தை கூரை வீட்டில் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளார். என் மகளுக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்த நான் என்ன மனநிலையில் இருப்பேனோ அதே மனநிலையில்தான் இருக்கிறேன். அதனால்தான் ஒருவேளை என்மகள் தவறு செய்திருந்தால் தூக்கில் போடுமாறு வேண்டுகோள் விடுத்தேன் என தெரிவித்தார்.

மேலும் என் மகனுக்காக வாதாடுவதற்கு பணம் செலவு செய்யமாட்டேன் என கூறினார்.

மற்றொரு குற்றவாளியின் மனைவி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். அவர் கூறியது, நானும் என் கணவரும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டோம். பாதிக்கப்பட்டது என்னைப் போல ஒரு பெண்தான். இந்த தவறு என் கணவர் செய்திருந்தாலும், யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என கூறினார்.

மற்றொருவரின் தாய் கூறுகையில் என்னுடைய மகனுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருகிறான். என் மகன் அப்படி செய்பவன் அல்ல. அவனுக்கு யாரோ மது ஊற்றிக் கொடுத்து வழக்கில் சிக்க வைக்க முயற்சித்துள்ளார்கள் என கூறினார்.

மற்றொரு குற்றவாளியின் பெற்றோர் என் மகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவன் வீட்டிலே தங்குவதில்லை. எங்கள் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரே நபர் அவன்தான் என்பதால் எதையும் கேட்டுக்கொள்வதில்லை. தற்போது அவன் சிறைக்கு சென்றுவிட்டதால் வயிற்றுக்கு சோறில்லாமல் தவிக்கிறோம் என்றார்.