கை கால்களை கட்டி, வாயைப் பொத்தி, வாயில் மதுவை ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட பெண் டாக்டர்? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்!

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை எரித்துக் கொன்றவர்கள் அவர் இறந்துவிட்டதாக நினைத்தே தீ வைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இரவில் பைக் பஞ்சர் ஆகி நின்றுகொண்டிருந்த கால்நடை பெண் மருத்துவரை கடத்திசென்ற கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அந்த பெண் தப்பித்து செல்லக்கூடாது என்பதற்காக அவரின் கை, கால்களைக் கட்டி, வாயைப் பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மதுகலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர்.

பின்னர் அவர் மயக்கமுற்ற பின் பாலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் பெண் மூர்ச்சையாகி போகவே இறந்து விட்டதாக நினைத்துள்ளனர். அதன் பிறகு பெட்ரோல் வாங்கிவந்து அவரது உடலை எரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் அந்தப் பெண் உயிருடன் இருந்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. பெண்ணை கொல்லவேண்டும் என நினைக்கவில்லை எனவும் ஆனால் போலீசில் சொல்லிவிடுவார் என்றுதான் பயந்து கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை எனவும் இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், டெல்லியில் இருந்து திரும்பிய தெலுங்கானா முதலமைச்சர் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் எனவும், ஆனால் பெண் மருத்துவர் மரணத்தை கண்டுகொள்ளவில்லை எனவும் தெலங்கானா எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.