பெண் டாக்டர் கற்பழித்துக் கொலை! குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளி தரமான சம்பவம் செய்தது போலீஸ்!

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!


தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல்.

4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் என்று பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்காவின் தந்தை ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 4 பேரையும் சுட்டுக் கொன்ற போலீஸ், மற்றும் தெலங்கானா அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.