காரில் வைத்து கதற கதற கற்பழிப்பு! பிறகு கழுத்தை நெறித்து இளைஞன் போட்ட வெறியாட்டம்! கல்லூரி வளாகத்தில் பரபரப்பு!

அமெரிக்காவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கார் பார்க்கிங்கில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க மாகாணம் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பிற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ரூத் ஜார்ஜ் 19, என்பவர் வந்துள்ளார். தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வீடு எடுத்து தங்கி தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வர நேரமானதால் அவர்களது பெற்றோர்கள் தங்களின் மகளை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் அவரது காரின் உள்ளே இளம்பெண் சடலமாக கிடந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது அமெரிக்காவில் பல்வேறு குற்றப் பிரிவுகளில் தேடப்படும் குற்றவாளியான டோனல்ட் என்பவர் அவரை பின்தொடர்ந்து வருவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் சடலமாக கிடந்த ரூத் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தனர்.மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மருத்துவத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அந்த நபரை தீவிரமாக தேடிய காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் மீது பாலியல் குற்ற பிரிவு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து கல்வி பயின்று தங்களது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர நினைத்த கல்லூரி மாணவியின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டுமா?என அப்பெண்ணின் பெற்றோர்கள் இந்த செய்தி தங்களுக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.