நடன அழகியின் ஆடைகளை கலைந்து தகாத செயல்! மதுபான விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!

ஐதராபாத்தில் பார் டான்சர் ஒருவர், வாடிக்கையாளர்களுடன் பாலுறவுக்கு மறுத்ததால் அவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய சக பெண் டான்சர்கள் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் ஒரு ஆணை தேடி வருகின்றனர்.


ஐதராபாத்தின் பஞ்சகுட்டா என்ற இடத்தில் உள்ள மதுபான விடுதியில் இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் டான்சராகச்  சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் எல்லாம் நன்றாகத் தான் செய்துகொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்லத்தான் பார் நிர்வாகம் மற்றும் சக டான்ஸர்கள் உள்ளிட்டோரின் கேவலமான மற்றொரு முகம் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது. 

பாருக்கு மது அருந்தவும், நடனத்தைக்  காணவும் வரும் வாடிக்கையாளர்களுடன் பாலுறவுக்கு பார் நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் மறுத்து வந்த நிலையில் சக டான்சர்களான பெண்களை கொண்டு அந்தப் பெண்ணை இணங்கச் செய்ய முயற்சிகள் நடைபெற்றன. 

எதற்கும் அந்தப் பெண் மசியாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் டான்சர், சக டான்சர்களான 4 பெண்களும் ஒரு ஆணும் சேர்ந்து வலுக்கட்டாயமாக நிர்வாணப் படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பெண் டான்சர்களை கைது செய்த போலீசார் தப்பியோடிய ஆணைத் தேடி வருகின்றனர்.