படுக்கைக்கு வர மறுத்த மனைவி! 2 செட் வயர்! 5 அடி நீள கம்பி! பெட்ரூமில் கணவன் போட்ட மாஸ்டர் பிளான்! நேரில் பார்த்து அதிர்ந்த மாமியார்!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வராததால் ஆத்திரத்தில் அவரது கணவர் மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்றதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் அன்பு நகரில் வசித்து வருபவர் சிவப்பிரகாசம் இவரது மனைவி ரூபிகா, தற்போது அவர் தாய் வீட்டில் இருப்பதாகவும் அவரை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்தும் வராத நிலையில் அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்ஜினியர் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில் அதை சுதாரித்த ரூபிகா மற்றும் அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

சிவப்பிரகாசம் மற்றும் ரூபிகா ஆகிய இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இதையடுத்து சிவப்பிரகாசம் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஒருகட்டத்தில் சிவப்பிரகாசம் ரூபிகாவை அடிக்க சென்றுள்ளார். இதைப்பார்த்த அதிர்ந்தார் அவரது மாமனார் அதைத் தடுக்க பார்த்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம் அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். கீழே விழுந்ததில் அவரது தலை அருகிலிருந்த சுவற்றின் மேல் மோதியுள்ளது இதையடுத்து மூச்சு பேச்சின்றி சம்பவ இடத்திலேயே அவரது மாமனார் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவப்பிரகாசம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி ரூபிகா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசிப்பதற்காக சென்றுள்ளார்.

இதையடுத்து சிவப்பிரகாசம் ஜாமீனில் வெளியே வந்து தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது.இந்நிலையில் அவரது மனைவி ரூபிகா மறுத்த நிலையில் மாமியாருடன் சிவப்பிரகாசம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவப்பிரகாசத்தை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதையடுத்து ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம் தனது மனைவியை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் மின் கம்பத்தில் இருந்து 5 அடி நீளமுள்ள கம்பி மூலம் மின்சாரத்தை ரூபிகாவின் ரூமுக்குள் செலுத்தி அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து மின்சார கம்பி வீட்டின் உள்ளே இருப்பதை அறிந்த ரூபிகா மற்றும் அவரது தாயார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சிவப்பிரகாசம் என்பவரை பேருந்து நிலையத்தில் வைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் மீது கொலை குற்ற பிரிவு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.