ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம் பெண்! கணவன் - மாமியாரின் வெறிச் செயல்!

கோவை அருகே ஓடும் காரில் இருந்து இளம்பெண் நடு ரோட்டில் தள்ளிவிடப்படும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.


கோவை சேர்ந்த பொறியாளர் அருண் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அருண்  தொடர்ந்து ஆர்த்தியை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைபடுத்தி வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் ஆர்த்தி தனது குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்க்கு சென்று விட , அப்போதும் அருண் பிரச்சனை கொடுத்துள்ளார். எனவே ஊட்டி காவல் நிலையத்தில் ஆர்த்தி கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார் இருவருக்கும் சமரசம் செய்து வைத்து, சேர்ந்து வாழ அறிவுறுத்தியதால் அருண் மன்னிப்பு கடிதம் அளித்து மனைவி ஆர்த்தியை அழைத்து வந்துள்ளார்.

மனைவி ஆர்த்தி யை கடந்த மே மாதம் தன் பெற்றோருடன் சென்று காரில் அழைத்து வந்த அருண், கோவையை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போது மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார், வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அருண் மனைவி ஆர்த்தியை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளி கொலை முயற்சி செய்துள்ளார். இந்த காட்சிகள் அருகில் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இதன் அடிப்படையில் ஆர்த்தி காவல் துறையில் நீதி கேட்டு புகார் அளித்து,  ஒரு மாத காலமாகியும் போலீசார் தொடர்ந்து மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஒரு மாதம் கடந்து இளம் பெண் ஓடும் காரில் இருந்து பட்டபகலில் கீழே தள்ளப்படும் காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.