கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் குடிபோதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பனின் மனைவியை ஆசை நாயகியாக்கி மனைவியாக்கிய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் அஜித் 29, அவர் அதே பகுதியில் ஜேசிபி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அவருடன் அவரது நண்பரும் பணியாற்றிய நிலையில் அவர் கடந்த ஓராண்டுக்கு முன்னராக இதய நோய் காரணமாக உயிரிழந்துவிட்டார்.
அவருக்கு சஜிதா 28 ,என்ற மனைவியும் உள்ளார். தன் நண்பர் இறந்த பிறகு அஜித் சஜிதாவிற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தன் கணவர் இறந்த நிலையில் சஜிதா தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து அஜீத் மற்றும் சஜிதா ஆகியோர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர் பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது ,பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்திருந்த நிலையில் அஜீத் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இதேபோல் நேற்று அஜித் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது சஜிதா அவரை கடுமையாக சத்தம் போட்டுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அஜித் அவரும் தன் பங்கிற்கு கடுமையான வார்த்தைகளை கூறி சஜிதாவை தீட்டியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சஜிதா வீட்டை விட்டு வெளியே வந்து வெளியே உட்கார்ந்து அழுதுள்ளார். அப்போது திடீரென வீட்டின் கதவை பூட்டி அஜித் அங்கிருந்த சேலையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அஜித் வெளியே வராத நிலையில் அவரது மனைவி கதவை தட்டி பார்த்தபோது கதவு திறக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஜித் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து ஊர் மக்கள் உதவியுடன் அஜித்தை கீழே இறக்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் போதையில் இருந்ததால் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்யும் சில நேரம் ஆகும் என தெரிவித்த நிலையில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது.
அப்போது சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.