நாமக்கல்லில் மனைவியின் தவறான நடவடிக்கையை கண்டு பிடித்த கணவன் மனமுடைந்து தங்கும் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் கணவன் போதுமானவராக இல்லை ! மனைவியின் செய்கையால் கணவன் எடுத்த விபரீத முடிவு!
நாமக்கல்லை சேர்ந்தவர் ராஜா ராமன் அல்ல! வெறும் ராஜா தான். இவரது மனைவி ஜானகி! காவியக் காதலி அல்ல சராசரி மனிதபிறவிக்கும் கீழான பிறவி. லாரி ஓட்டுநரான ராஜாவும் ஜானகியும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்ததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு ராஜா தனது குடும்பத்தைப் பிரிந்து பவானியில் தங்கி இருந்தார். இந்நிலையில் இவர்களது உறவினரை இருவருக்கும் சமரசம் செய்து இருவரையும் சேர்த்து வைக்க எண்ணினர்.
அதன்பேரில் மீண்டும் திருப்பூர் வந்த ராஜாவுக்கு தனக்காக காத்திருந்த பேரதிர்ச்சி சற்றும் தெரியாது. திருப்பூருக்கு வந்தபோதுதான் தனது மனைவி பெயருக்கு ஏற்ப உண்மையிலேயே ஜானகி அல்ல என்றும், அவருக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்த ராஜா பல்லடம் சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார். இந்நிலையில் நேற்று ராஜா தங்கியிருந்த அறையின் கதவு வெகுநேரமாக திறக்கப்பட்டதையடுத்து சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்