வெள்ளகோவில், முத்தூர் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதை அறிந்த கணவர் துக்கம் தாங்காமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தவிக்கும் 2 குழந்தைகள்! ஆசை நாயகனுடன் தாய் எஸ்கேப்! பிறகு தந்தை எடுத்த விபரீத முடிவு!
வெள்ளகோவிலை அடுத்து முத்தூர் தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெகநாதன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மற்றும் அவரது மனைவி லட்சுமி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி வேலைக்கு செல்லும்போது அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளதாகவும் தெரிகிறது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது இதை அறிந்த ஜெகநாதன் தன் மனைவி லட்சுமியிடம் இதை கைவிடுமாறு பலமுறை எச்சரித்துள்ளார்.
நீ இவ்வாறு செய்தால் குழந்தைகளின் நிலை என்ன ஆகும் என்று லட்சுமியிடம் பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அந்த நபருடன் உண்டான உறவை முறித்துக் கொள்வதாக தெரியவில்லை இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் சண்டை முற்றிய நிலையில் லட்சுமி காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.
இதனால் தன் மனைவி தனது கள்ளக் காதலனுடன் ஓடி சென்றதை அறிந்த ஜெகநாதன் மனமுடைந்து தன் வீட்டாரிடம் இந்த செய்தியைத் தெரிவித்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றும் கொலைக்கான காரணம் குறித்து ஜெகநாதனின் தந்தையிடம் கேட்டபோது தன் மருமகள் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதை ஜெகநாதன் கண்டித்ததாகவும் அதற்கு மருமகள் அந்த நபருடன் ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து தன் மகன் ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் லட்சுமி மற்றும் அவரது கள்ளக் காதலனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.