மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி வேடத்தில் மக்களை ஏமாற்றி பணம் பறித்த பெண்ணையும், தோழியான அந்தப் பெண்ணுக்கு தனது மனைவியின் காவல் சீருடையை திருடிக் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்,
போலீஸ் மனைவியின் அந்த ஆடைகளை கள்ளக் காதலிக்கு கொடுத்த கணவன்! ஏன் தெரியுமா?

இந்தூரைச் சேர்ந்த அந்த நபரின் மனைவி மத்தியப் பிரதேச மாநில காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த நபருக்கு அறிமுகமான ஒரு பெண்ணுடன் பழக்கம் வளர்ந்து காதலானது.
மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி பணம் பறிப்பது அந்தப் பெண்ணின் வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் மற்றொரு மோசடிக்கு திட்டமிட்ட அந்தப் பெண் அந்த நபரிடம், அவரது மனைவியின் காவல் சீருடையை கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி தனதுமனைவியின் சீருடையை அந்த நபர் திருடிக் கொடுக்க அதனை அணிந்து கொண்டு காவல் அதிகாரி போல் நடித்து அந்தப் பெண் பலரை பல்வேறு வகையில் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்தப் பெண் சிக்கினார். அப்போது அந்தப் பெண்ணுக்கு தனது மனைவியில் சீருடையை திருடிக் கொடுத்து அந்த நபரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே டெல்லியில் ஒருவர் தனது காரில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு சென்றார். அபோது இருசக்கர் வாகனத்தில் பின் தொடர்ந்த இருவர் காரின் ஒரு டயரை பஞ்சராக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காரை நிறுத்திய அவர், டயரை ஆய்வு செய்துகொண்டிருந்த போது கார் கண்ணாடியை உடைத்த அவர்கள் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வழியாக வந்த ரோந்துப் போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர் தனக்கு நேர்ந்ததை விளக்கினார். உடனடியாக அந்த நபர்களை துரத்திச் சென்ற ரோந்துப் போலீசார், சாஹில், மகேஷ் என்ற அந்த இருவரையும் வளைத்துப் பிடித்து மடிக்கணினியை மீட்டனர்.