ராகுல் பிரதமரானால் தான் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க முடியும்! நீதிமன்றத்தை அதிர வைத்த கணவன்!

இந்தூர்: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மனைவிக்கு ஜீவனாம்சம் தருகிறேன் என்று, ஒரு கூறியுள்ளார்.


மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில், ஆனந்த் ஷர்மா என்பவர், கடந்த 2006ம் ஆண்டு தீப்மாலா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2 பேரும் பிரிந்து வாழ்கின்றனர். 

இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும், வாழ்க்கையை நடத்த போதிய நிதி உதவியை தனது கணவர் அளிக்க வேண்டுமென, தீப்மாலா, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பேரில், மாதந்தோறும், ரூ.4500 நிதி உதவி வழங்கும்படி, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆனந்த் ஷர்மா, தற்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், மனைவிக்கு  வாழ்வாதார தொகை தர முடியாது என்று கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், மனைவிக்கு, இந்த நிதி உதவியை தவறாமல் வழங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதாவது, கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால், ஆண்டுதோறும் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக, காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதனை சுட்டிக்காட்டியே ஆனந்த் ஷர்மா இதனை கூறியுள்ளார். அவரது பதிலால், நீதிமன்றமும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.