என் புருசனுக்கு நான் பால் தான் கொடுத்தேன்..! விஷ மோர் மேட்டரில் ஏற்பட்ட பகீர் திருப்பம்!

காதலியை கரம்பிடிக்க வேண்டும் என்பதற்காக மனைவி மோரில் விஷம் கலந்ததாக நாடகம் ஆடிய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆந்திராவின் ஜோனகிரி கிராமத்தை சேர்ந்த லிங்கையா என்பவருக்கும், நாகமணி என்பவருக்கும் 2 வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவருக்கும் நேற்று முன்தினம் மணப்பெண் வீட்டில் விருந்து வைக்கப்பட்டது. அப்போது பாலை குடித்த லிங்கையா திடீரென வயிற்று வலியால் துடித்தார்.

பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் மனைவில் பாலில் விஷம் கலந்து தன்னை கொலை செய்ய முயன்றதாக நாடகம் ஆடினார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவ மக்களிடையே பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் லிங்கைய்யாவின் பேச்சை நம்பி அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தான் தனது கணவருக்கு பால் தான் கொடுத்ததாகவும், மோர் கொடுக்கவில்லை என்று கூறினார். மேலும் பால் கொடுத்த டம்ளரையும் காட்டியுள்ளார். அவர் அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட போலீசார் சந்தேகத்தை கணவர் பக்கம் திருப்பினர்.

சிகிச்சைக்குப்பின் லிங்கையாவிடம் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு முன் லிங்கையா வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நாகமணியை திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

இதனால் மனைவி விஷம் கொடுத்ததாக நாடகமாடிய லிங்கையா மருத்துவமனைக்கு செல்லும் முன் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். காதலியை கரம்பிடிக்க வேண்டும் என்பதற்காக மனைவி மேல் பழியை போட்டு சிறைக்கு அனுப்பிவிடலாம் என்று திட்டம் போட்டுள்ளார் லிங்கையா.