விவாகரத்து வாங்க மதம் மாறிய கணவன்! அதிர்ச்சியில் உறைந்த காதல் மனைவி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை நிமித்தமாக சென்ற நபர் அங்கே பார்த்த பெண்ணை விரும்பி மதத்தை மறைத்து திருமணம் செய்து கொண்ட பின்னர் ,தற்போது அந்த பெண்ணை மதம் மாற்றி விவாகரத்து செய்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..


ராஞ்சியில் லாரி ஓட்டுநராக வேலைபார்த்து வருபவர் ரம்ஜான் அன்சாரி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உத்திரப் பிரதேசத்தின் ஆசம்கருக்கு வேலைக்காக சென்றபோது, அந்த ஏரியாவைச் சேர்ந்த மனிஷா யாதவ் என்கிற இந்துப் பெண்ணிடம் தன் பெயர் அகிலேஷ் யாதவ் என்றும் தன்னை இந்து என்றும் பொய் சொல்லி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இஇருவருக்கு, ஏற்கனவே பிள்ளை உள்ள நிலையில், மனிஷா யாதவ் மீண்டும்  கர்ப்பமாகவுள்ளார்.இதனிடையே, தன் கணவர் இந்து அல்ல, முஸ்லீம் என்றும், அகிலேஷ் யாதவ் அல்ல ரம்ஜான் அன்சாரி என்றும் மனிஷாவுக்குத் தெரிய வர வீட்டை தலைகீழாக புரட்டி போட்டது மேலும் இது தொடர்பாக  இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டனிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் ஒருவழியாக ரம்ஜான் அன்சாரி, தன் மனைவியை சமாதனாப்படுத்தி, முஸ்லீம் மதத்துக்கு மாற்றியதாகக் கூறப்படுறது.

மேலும் ரம்ஜான் அன்சாரி ஏற்கனவே திருமணமானவர் என்கிற தகவலும் மனிஷாவுக்கு தெரியவர, பிரச்சனை பூதகாரமாகியது, பிரச்சனையை முடிக்க நினைத்த ரம்ஜான் அன்சாரி, 3 முறை தலாக் சொல்லி, தன் மனைவியை விவாகரத்து செய்வதாக  கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மனைவியை எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்துகொள்ளும் சவுகரியத்துக்காகவே, ரம்ஜான், தன் மனைவியை மதம் மாற்றியதாகவும் தெரிகிறது

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட முத்தலாக்  சட்டத் திருத்த நடைமுறைக்கு பின்னர், அவசரச் சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது.  இந்த நிலையில் அன்சாரி, தடை செய்யப்பட்ட முத்தலாக்கினையே கூறியதாக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஹாஜாரிபாகின் காவல் நிலையத்தில் கணவர் மீது விசாரணை நடத்த மனீஷா புகார் கொடுத்துள்ளார்.