லீலா இருக்கும் போது இந்திரா எதுக்கு? 60 வயதில் வந்த ஆசையால் தலைமை ஆசிரியர் அரங்கேற்றிய பயங்கரம்!

தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து விட்டார்கள் என 25 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒருவர் மனைவியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ளது.


விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியை சேர்ந்த நடராஜன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி இந்திரா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். நகைக்காக மனைவியை யாரோ கொன்றுவிட்டதாக நடராஜன் போலீசில் தெரிவித்திருந்தார். ஆனால் நடராஜன் முன்னுக்குப்பின் முரணான பதில் அளிக்கவே, போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி இந்திராவை தான்தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் லீலா என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அவரது விருப்பத்துக்கு மாறாக இந்திரா என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதை ஏற்க மணமில்லாமல் யாருக்கும் தெரியாமல் காதலியை லீலாவை திருமணம் செய்து கொண்டு திருக்கோவிலூரில் குடி வைத்துள்ளார்.

இந்த விவகாரம் முதல் மனைவி இந்திராவுக்கு தெரியவர கடந்த 25 வருடங்களாகவே வீட்டில் குடும்பத் தகராறு நடைபெற்றதாக தெரிகிறது. நடுவில் எங்கோ ஒரு இடத்தில் சமாதானம் ஆக அதற்கு அடையாளமாக இந்திராவுக்கு ஸ்ரீராம் மகன் பிறந்துள்ளான். ஆனால் அவனையும் ஒருமுறை நடராஜன் அவதூறாக பேச மனஉளைச்சலால் அவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே லீலாவுடன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் இந்திராவை தீர்த்துக் கட்டுவதுதான் ஒரே வழி என நினைத்த நடராஜன், முதல் மனைவி இந்திராவை அடித்துக் கொன்றுவிட்டு பழைய துணிகளை போட்டு அவரது உடலை எரித்துள்ளார். பின்னர் இந்திராவின் 8 சவரன் நகைகளுடன் வெளியில் சென்றுவிட்டார்.

அதாவது மர்மநபர்கள் யாரோ நகைக்காக இந்திராவை கொன்று எரித்து விட்டார்கள் என்று நாடகம் ஆடினார் நடராஜன். இதையடுத்து, போலீசார் நடராஜனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.