கூப்புட்டா வரமாட்டியா? நடுரோட்டில் மனைவியின் சங்கை அறுத்துப் போட்ட கணவன்! அதிர்ச்சி காரணம்! சேலம் திகுதிகு!

சேலத்தில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்ததற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கணவர் அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.


சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரும் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்த மோகனேஸ்வரி இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை ஒருவர் காதலித்து பெற்றோர்களின் ஒப்புதல் படி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் கோபி அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கோபி குடித்து விட்டு வந்து மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது .

இதனால் ஆத்திரமடைந்த மோகனேஸ்வரி தனது கணவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மோகனேஸ்வரி கோபியிடமிருந்து பிரிந்து தனது மகனுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அப்போது அவர் அங்குள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் பல நாட்கள் கழித்து கோபி தனது மனைவியை காண அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வேலை முடித்துவிட்டு மோகனேஸ்வரி தனிமையில் வந்துள்ளார். அப்போது அவரை சந்தித்த கோபி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மோகனேஸ்வரி வர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனேஸ்வரியை கடுமையாக தாக்கியுள்ளார். உடனே கோபி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு உடனே ஓடி வந்து பார்த்தபோது மோகனேஸ்வரியின் கழுத்தில் பலமாக கத்தி பாய்ந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரது கணவர் கோபியை தீவிரமாக தேடி வருகின்றனர்.