திருமணமாகி 7 வருடம்! குழந்தை இல்லை! கணவன் வேலைக்கு ஆகல..! அதான்..! மனைவி எடுத்த விபரீத முடிவு!

உத்திரமேரூர் அருகே, காதல் மனைவியுடன் தவறான பழக்கம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரமேரூர் கிழக்கு கம்மாள தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக இரவு காவல் துறையிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். இந்நிலையில், அங்கு இளைஞர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைந்தார். பின்னர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

பின்னர் நடத்திய விசாரணையில், கொலையான இளைஞர், உத்திரமேரூர் தண்டுகார தெருவைச் சேர்ந்த மதன் என்றும், மறைமலை நகரில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார் என்பது தெரிய வந்தது. மேலும் மதனுக்கும், அதேத் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் தசரசன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்துள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும்போது, தசரதனுக்கும், அவருடன் படித்த மதுராந்தகத்தைச் சேர்ந்த அஸ்வினிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 7 ஆண்டுகள் திருமணம் ஆகிய நிலையில் இருவருக்கும் குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளது.

இதற்கிடையில், அதேத் தெருவில் வசிக்கும் தசரதனின் உறவுக்காரரான மதனுடன் தசரதன் மனைவிக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. இது தசரதனுக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றனர். 

இதுகுறித்து காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்டையில் அஸ்வினி மற்றும் மதன் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். பின்னர் சரண் அடைந்த இருவரும் மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் அஸ்வினி கணவர் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதால், அவருடன் வாழ விரும்பவில்லை என்று கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருவரும் பொங்கலை கொண்டாட மதன் உத்திரமேருர் சென்றுள்ளார். இந்நிலையில், தசரதன் கோபத்தில் மதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, உத்திரமேரூர், கம்மாள தெருவில் சென்ற மதனை, தசரதன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளனர்.

இந்த தகவலை அடுத்து, காவல்துறையினர் கைது செய்து 5 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.