மனைவியுடன் தோட்டத்துக்கு சென்ற கணவன்..! வழிமறித்து வெட்டிச் சாய்த்த வயது பெண்! தேனி திகுதிகு! அதிர வைக்கும் காரணம்!

தேனியில் 23 வயது இளம்பெண் ஒருவர் முன்விரோதம் காரணமாக தம்பதியினரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டம் வேப்பம்பட்டி பகுதியில் பாண்டீஸ்வரன் , நிரஞ்சனா தம்பதியினர் திருமணமான நாள் முதல் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் ராஜேஸ்வரி மணிகண்டன் ஆகிய தம்பதியினர் உடன் சில வருடங்களாகவே விரோதமானது பாண்டீஸ்வரன் நிரஞ்சனா தம்பதியினருக்கு இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் மணிகண்டன் தனது மனைவி ராஜேஸ்வரி உடன் இலை அறுப்பதற்காக வாழை தோப்பிற்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பாண்டீஸ்வரன் நிரஞ்சனா தம்பதியினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற நிரஞ்சனா வாழைத்தோப்பிற்கு மணிகண்டன் கொண்டுவந்த அரிவாளை எடுத்து அவரையே சரமாரியாக வெட்டியுள்ளார்.

அப்பொழுது தடுக்க முயன்ற அவரது மனைவி ராஜேஸ்வரியையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க ராஜேஸ்வரி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கணவன் மனைவி இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.