தங்கச்சியை கட்டிக் கொடுத்து கணவனின் ஆசையை தீர்த்து வைத்த மனைவி! விபரீத கல்யாணம்!

மனைவியின் தங்கையை விரும்பிய கணவருக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் அவருக்கே தாரை வார்த்து கொடுத்த சம்பவம் மத்திய பிரேசத்தில் நடைபெற்றுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் திலிப், வினிதா ஆகியோருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளது. இதற்கிடையே வினிதாவுக்கு உடல்நலம் குன்றியதால் 3 குழந்தைகளையும் கணவர்தான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியிடம் சென்று உன் தங்கையை விரும்புகிறேன், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காத மனைவி உறவினர் பெண்ணான தங்கை முறை கொண்ட ரச்சனா என்பவரை கணவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார். இது குறித்து மனைவி தெரிவிக்கையில் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேறு ஒருவரை கணவருக்கு மனைவியாக்கினால் நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தங்கையை திருமணம் செய்து வைக்க சம்மதித்ததாக தெரிவித்தார்.

தன் தங்கை என்பதால் ஒரு வேளை நான் இறந்துவிட்டாலும் அவள் தன்னுடைய பிள்ளைகள் போல என்னுடைய பிள்ளைகளை பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். 

எது எப்படியோ, ஒருவேளை கணவர் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்திருந்தால் நாளை கள்ளக் காதல் போன்ற பிரச்சனைகள் வந்து குடும்பமே சீரழிந்து போவதற்கு பதில், பேசாமல் சம்மதித்து தொலைத்தால் குழந்தைகளாவது பத்திரமாக இருக்கும் என்ற கணிப்பில் வினிதா தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்தாரோ என்னவோ?