மனைவி வேறு ஒருவருடன் வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்த ஆத்திரம் அடைந்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்
துடிக்க துடிக்க மனைவியை கொசு மருந்தை குடிக்க வைத்த கொடூர கணவன்! காரணம் வாட்ஸ்ஆப் சாட்டிங்! அதிர வைக்கும் சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வாட்ஸ் அப் மற்றும் சந்தேகத்தால் ஒரு குடும்பம் சீரழிந்துள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் அஞ்சலி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன
இந்நிலையில் கணவன் வெளியில் சென்றிருந்த நிலையில் அஞ்சலி வாட்ஸ் அப்பில் தனியாக சேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணவன் மனைவியின் செல்போனை வாங்கி பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டான்
இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கொசுவை ஒழிக்க பயன்படுத்தப்படும் மருந்தை அஞ்சலியின் வாயினுள் ஊற்றியதோடு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தான்.
இதுதொடர்பான புகாரின்பேரில் அஞ்சலியின் கணவனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாயை இழந்ததோடு தந்தையும் சிறைக்கு சென்றதால் குழந்தைகள் இருவரும் பரிதவித்து வருகின்றன.