கள்ளத் தொடர்பு சந்தேகம்! 45 வயது மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்!

கள்ளக்காதல் சந்தேகம் காரணமாக, மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.


டெல்லியின் வடகிழக்கே உள்ள ஜாஃப்ராபாத் பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, 45 வயதான ஆஸ்மா என்ற பெண்மணி, அவரது வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில், இறந்து கிடந்தார். எனினும், இதுபற்றி அவரது கணவர் அனீஸ் கொஞ்சமும் கவலைப்படவில்லை என கூறப்படுகிறது. அவர், போலீசில் புகார் சொல்லவும் இல்லையாம். சுற்றுப்புறம் உள்ள மக்களின்பேரில், போலீசாருக்கு, இதுபற்றி தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் உடனே சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு, அனீஸ் உள்பட அவரது குடும்பத்தினர் யாருமே ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரேத பரிசோதனையில், ஆஸ்மா, கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. 

இதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், 2 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக, தனித்தனி ஃபிளாட்களில் வசித்து வந்துள்ளனர். இதில், ஆஸ்மாவுக்கு, கள்ளக்காதல் இருக்குமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள், வலுப்பெற்ற காரணத்தால், அனீஸ், அவரை கழுத்து நெரித்துக் கொன்றுள்ளார்.  இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.