நள்ளிரவில் செல்போனில் மனைவி ரகசிய பேச்சு! கண்டுபிடித்த கணவன் செய்த விபரீதம்!

செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.


மும்பை அருகே உள்ள காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் சச்சின் டால் வி. இவருக்கு திருப்தி என்ற மனைவியும் எட்டு வயது மகனும் உள்ளனர். மகன் கோடை விடுமுறையை கொண்டாட தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்க்கும் சர்ச்சில் குடி பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார்.

சம்பளப் பணத்தில் தினமும் குடித்துவிட்டு வந்து அவர் மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வருமானத்திற்கு வழி இன்றி தவித்த அவரது மனைவி வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு செல்லத் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருப்தி செல்போனில் அதிகநேரம் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டுக்கு வந்த கணவன் யாருடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறி மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்த சச்சின் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் வீட்டிலிருந்து தப்பினார்.

மறுநாள் திருப்தி வேலைக்கு வராமல் இருக்கவே அவரை பணியமர்த்தியவர்கள் சந்தேகம் அடைந்தனர். வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக நினைத்த கணவன் சச்சினை கைது செய்தனர்.