திருமணமாகி ஒரே வாரம்! கர்ப்பமான காதல் மனைவி! ஆனால் கொன்று தூக்கில் ஏற்றிய கணவன்! பதற வைக்கும் காரணம்!

சென்னை திரிசூலத்தில் கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகம் ஆடியதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை திரிசூலத்தை சேர்ந்த அபின்ராஜ் என்பவர் மனீஷா என்பவர் 5 வருடமாக காதலித்து வந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்திய நிலையில் மனீஷா கர்ப்பம் தரித்துள்ளார்.

இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தங்களுக்குத்தான் சிக்கல் என்பதை உணர்ந்த உறவினர்கள் அபின்ராஜ், மனிஷாவை வீட்டை விட்டு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனீஷா அழுத்தம் கொடுக்க வேறு வழியின்றி ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மனைவி மனீஷா திடீரெ தற்கொலை செய்து கொண்டதாக கூறி அபின்ராஜ் அவரது தந்தைக்கு தகவல் அளிக்க அவர் அதிர்சி அடைந்தார். மகளின் இறுதிச் சடங்கிற்கு வந்த தந்தை மனிஷாவின் செல்போனை பார்த்தபோது அபின்ராஜூக்கு அனிதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பதை பார்த்து மேலும் வேதனை அடைந்தார்.

இது குறித்து போலீசாரிடம் தகவல் புகார் அளித்ததின் பேரில் அபின்ராஜை விசாரித்து போலீசார் கைது செய்தனர். செல்போனில் அனிதாவிடம், மனிஷா தாலி பிச்சை கேட்டு கெஞ்சுவது, அனிதா குறித்து அபின்ஷா மனைவியிடம் கெஞ்சுவது உள்ளிட்ட ஆடியோ உரையாடல்கள் பதிவாகி உள்ளது. எனவே எதற்காக மனைவியை அபின்ராஜ் கொன்றார் என்ற விவரங்கள் அனிதாவிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.