நீ ஏன் இப்படி இருக்க? கணவன் கேட்ட ஒரே ஒரு கேள்வி! கருப்பாக இருந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!

ஜெய்ப்பூர்: கருப்பாக இருப்பதாகக் கூறி அடிக்கடி அவமானப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.


ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கிபாய். 21 வயதான இவர், சற்று கருப்பான நிறம் கொண்டவர் ஆவார்.

இவருக்கு சமீபத்தில்  அருகில் உள்ள பான்ஸ்கோயரா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் லோதா என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இருவரும்  ஒன்றாக குடும்பம் நடத்திவந்த நிலையில், மங்கிபாய் கருப்பாக இருப்பதை அடிக்கடி கணவர் தினேஷ் சுட்டிக்காட்டி, ஏளனம் செய்து வந்திருக்கிறார்.

இந்த அவமானத்தால் மன உளைச்சலுக்கு ஆளான மங்கிபாய், தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி மங்கிபாய் தந்தை உள்ளூர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.