பெங்களூரு: மனைவியின் செக்ஸ் வீடியோவை ஆதாரம் காட்டி, கணவன் விவாகரத்து வாங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாங்க... இது தான் என் மனைவி செ*ஸ் டிவிடி! நீதிமன்றத்தை அதிர வைத்த கணவன்!
பல்லாரியை சேர்ந்த ஆண் ஒருவர் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாகக் கூறி நீதிமன்றத்தில் முறையிட்டார். 1991ம் ஆண்டு திருமணமான அவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். இருந்தாலும், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 4, ஜூன் 9 தேதிகளில் அந்த நபர் பெங்களுருவிற்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டார்.
அந்த நேரத்தில், அவரது மனைவி ஆண் நண்பர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்திருக்கிறார். இந்த சம்பவத்தை ரகசியமாக பெட்ரூமில் ஒளித்து வைத்திருந்த டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் அவரது கணவன் பதிவு செய்தார். இதன்பேரில், பல்லாரி குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், இச்சம்பவம் மிக கொடூரமான சிந்தனை கொண்டதாக உள்ளதென கூறிய நீதிமன்றம் ஒருவழியாக, மனைவியின் நடத்தையின் அடிப்படையில் விவாகரத்து வழங்குவதாக உத்தரவிட்டது.
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபரின் மனைவி 2013ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், ''எனது கணவருக்கு ஆபாச படங்கள் எடுப்பது வாடிக்கை. அவற்றில் என்னை பலவந்தப்படுத்தி நடிக்கச் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நான் அப்படி நடித்த ஆபாச படங்களையே தற்போது நீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்டி என்னை நடத்தை கெட்டவள் என்று கூறி விவாகரத்து செய்துவிட்டார். இது ஏற்புடையதல்ல,'' எனக் கூறியிருந்தார். இதன்பேரில் விசாரணை செய்த நீதிபதிகள் அமர்வு, கர்நாடகா மாநில இந்து திருமணச் சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட நபர் விவாகரத்து தரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையிடுவது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரின் மகள்களை விசாரித்தபோது, சம்பவம் நடந்த நாட்களில் தங்களது தாய் படுக்கையறையில் இருந்தது உண்மைதான் என்றும், தந்தையும் மற்றொரு அறையில் மறைந்திருந்தார் என்றும் தெரிவித்திருந்தனர்.