70 வயதில் அண்ணன் மனைவியுடன் தகாத உறவு! கண்டுபிடித்த 60 வயது மனைவி! பிறகு அரங்கேறிய கொடூரம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் வயது (70) இவரது மனைவி ஜோதி (வயது 60). ராமகிருஷ்ணனுக்கும் தனது மனைவிக்கும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.


ராமகிருஷ்ணன் தனது மனைவியிடம் வீட்டை விற்று தறுமாறு குடித்து விட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.ராமகிருஷ்ணனுக்கும் சூரப்பட்டியில் இருக்கின்ற தனது அண்ணன் மனைவிக்கும் தகாத உறவு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் போது கடந்த 7-ம் தேதி மதுபோதையில் இருந்த ராமகிருஷ்ணன் தனது மனைவியை சுத்தியலால் தாக்கிவிட்டு வீட்டை வெளியே பூட்டி விட்டுச்சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்த ஜோதியை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு ஸ்டேன்லே மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.

அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த ஜோதி வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காலையில் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டியில் மறைந்திருந்த ராமகிருஷ்ணனை போலிசார் சிறையில் அடைத்தனர்.