நீ அவன் கூட படுக்கை அறைக்கு போ..! மனைவிக்கு கணவன் கொடுத்த அட்வைஸ்..! பிறகு அரங்கேறிய பரபர சம்பவம்!

ஐதராபாத்: தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.


மொய்னாபாத் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த அக்டோபர் 18ம் தேதி புகார்  ஒன்றை அளித்தார். அதில், ''விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த கனிஷ்கா என்ற இளம்பெண்ணிடம் ஆசையாகப் பழகி வந்தேன். அவரோ ஒருநாள் எனக்கு மயக்க மருந்தை கலந்துகொடுத்துவிட்டு, என்னுடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

பிறகு, அந்த புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி பணம் தரும்படி கேட்டு அவர் மிரட்டினார். கனிஷ்காவின் கணவர் விஜய குமாரும் இதுதொடர்பாக என்னை பலமுறை மிரட்டி வந்தார். இதற்குப் பயந்து ஏற்கனவே அவர்களுக்கு நான் ரூ.20 லட்சம் பணம் கொடுத்துள்ளேன். இருந்தாலும், என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். அவர்களை கைது செய்ய வேண்டுகிறேன்,'' எனக் கூறியிருந்தார்.  

இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், கனிஷ்கா மற்றும் அவரது கணவர் விஜயகுமாரை கைது செய்தனர்.