கொட்டிய மழை! வீட்டுக்குள் வெள்ளம்! கணவனுடன் மனைவி ஜலக்கீரிடை! வைரல் வீடியோ!

ரணகளத்துலயும் கிளுகிளுப்பு கேட்குதோ என்பது போல மழை வெள்ளத்தால் வீடே மூழ்கிய நிலையில் அந்நீரில் பெண் ஒருவர் எதிர் நீச்சல் அடிக்கும் காட்சிகள் சமூக வலைளதங்களில் வெளியாகி உள்ளது.


ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பேசும் வசனம் பின்னர் அனைவராலும் பேசப்பட்டது. அதாவது ஆபத்தான சூழ்நிலையில் கதாநாயகன் லவ் மூட்டில் கதாநாயகியை சைட் அடித்துக் கொண்டு இருப்பார். அப்போது வடிவேலு கோபமாக இந்த ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு கேட்குதோ என்று பேசுவார்.  

தென்மேற்கு மழை தொடங்கிய காலத்தில் இருந்தே பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்து கொண்டு அதை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் புகுந்து வீட்டை தண்ணீரை எடுத்து வெளியில் ஊற்றிக் கொண்டிருந்த தம்பதி ஒருவர் திடீரென நீச்சல் பழகத் தொடங்கி விட்டனர்.

அதவாது நீச்சல் கற்றுக் கொடுப்பது போல் மனைவியை கைத்தாங்கலாக தண்ணீரில் பிடித்துக் கொண்டார். மனைவியும் ஜாலியாக அந்த தண்ணீரில் நீச்சல் அடித்து மகிழ்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் இடுப்புக்கு மேல தண்ணீர் இருக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் மனைவியை நீச்சலடிக்க விட்டு கணவர் சந்தோஷம் அடைகிறார். அதோட அவங்களுக்கு நீச்சலையும் சொல்லித்தருகிறார்.

இந்த காட்சிகள் யாருடைய செல்போனிலோ கிளிக் செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் சீரியஸான செய்திகளையே படிக்கும் உங்களுக்கு நடு நடுவே இதுபோன்ற கிளுகிளுப்பான செய்திகள் வந்தால் உங்களுக்கும் ஒரு கிளுகிளுப்புதானே?