புருவத்தை எப்படி அலங்கரிக்க வேண்டும் தெரியுமா?

இன்று அழகு நிலையங்களுக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் புருவத்தை சரிப்படுத்தவே செல்கின்றார்கள்.


பெரும்பாலான பெண்களின் அழகுக்கு காரணமாகவும்அழகின்மைக்கு காரணமாகவும் இருப்பது இந்த புருவங்கள்தான்அதனால்தான் சிலரது முகத்தில் விழிகளும் மூக்கும் இதழ்களும் பிரமாதமாய் அமைந்திருந்தாலும் ‘ஏதோ ஒன்று’ குறைவது போல் தோன்றும்புருவத்தை சரியாக அலங்கரிக்கப்பட வேண்டியது மிக அவசியம்முறையாக அலங்கரிக்கப்படாத புருவமும் அழகை மோசமாகவே காட்டும்.


அடர்த்தியாகத் தொடங்கிகத்தி மாதிரி முடியும் புருவம் ஒரு பெண்ணுக்கு அழகாக இருந்ததுஅதைப் பார்த்த அவள் தோழிகளும் அப்படியே அமைத்துக் கொண்டார்கள்ஆனால் முதலாமவருக்குக் கிடைத்த பாராட்டு மற்ற யாருக்கும் கிடைக்கவில்லைஏன்அவளது முகத்தோற்றத்துக்குப் பொருந்திவிட்ட புருவ அமைப்பு மற்றவர்கள் முகத் தோற்றத்துக்கு ஏற்றதாக இல்லைஒவ்வொருவரின் முகத்துக்கும் ஏற்ப புருவ அலங்காரமும் மிகச்சரியாக இருக்க வேண்டும்.