ஆண்களின் உயிர் அணுக்கள் முழு சக்தி பெற என்ன செய்யணும் தெரியுமா?

உடலில் செலினியம் குறைபாடு ஏற்பட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் பெண்களுக்கு கருவுறாமை பிரச்சினைகள் ஏற்படும் என்றும் சமீபத்திய ஆய்வுகள்தெரிவிக்கிறது.


உலகில் ஒரு பில்லியன் மக்கள் செலினியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

செலினியம் என்பது ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பல செயல்முறைகளைக் கட்டுப்படுத்துகிறது. தாது தைராய்டு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் இருதய மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களுக்கு விந்தணு சக்தியைக் கொடுப்பதில் செலினியம் முக்கியம் பங்கு வகிக்கிறது. 

செலினியம் குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் செலினியம் நிறைந்த உணவு பொருட்களைக் குறைவாக உட்கொள்ளுதல் ஆகும். வயதானவர்களிடையே செலினியம் குறைவாக உறிஞ்சப்படுவது மிகவும் பொதுவானது.

டயாலிசிஸ் குறைபாடு மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செலினியம் குறைபாடு ஏற்படுகிறது.

அதிகப்படியான சோர்வு, மன வளர்ச்சி குறைவு, கருச்சிதைவு, கருவுறாமல் இருத்தல், முடி உதிர்தல், பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம், தைராய்டு சுரப்பு குறைவு, தசை பலவீனம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் குழப்பம் போன்றவை செலினியம் குறைபாட்டிற்கனா அறிகுறிகளாலம்.

இதனால் இதயம் பலவீனம் அடைதல், இதய செயலிழப்பு, கார்டியோஜெனிக் அதிர்ச்சி, மனஅழுத்தம் அதிகரிக்கும், உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும், தைராய்டு குறைவு, முன் கழுத்துக் கழலை, வளர்ச்சிக்குறைபாடு நோய், அடிக்கடி கருச்சிதைவு போன் பாதிப்புகள் ஏற்படும்.

செலினியம் குறைபாடு உள்ள ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். பெண்களிடையே செலினியம் குறைபாடு கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த பிரச்சனைகளை போக்க செலினியம் செலினியம் நிறைந்த உணவுப்பொருட்களான மீன், இறால், நண்டு, ஆட்டிறைச்சி, ஈரல், கோழிக்கறி, முட்டை, ப்ராக்கோலி, முட்டைகோஸ், ரொட்டி, பிரேசில் நட்ஸ், பசலைக்கீரை, சூரியகாந்தி, எள், ஆளி, சியா விதைகள், பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்ளலாம்.