கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

பிரசவத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்கள் உடல் ரீதியிலும் மனரீதியிலும் தயாராவது மட்டும் போதாது. ஆம், பிரசவ காலத்தில் மருத்துவமனையில் சில நாட்களாவது தங்கவேண்டி இருக்கும் என்பதால், அதற்குத் தேவையான பொருட்களையும் வாங்கி தயாராக வைத்திருக்க வேண்டும்.


·         கர்ப்பிணியின் மெடிக்கல் ஃபைல் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். இதில்தான் கர்ப்பிணியின் ரத்த வகை தொடங்கி, அவருடைய பிரச்னைகளையும் மருத்துவர் குறிப்பிட்டிருப்பார். அதனால் கர்ப்பிணியுடன் இந்த ஃபைல் அவசியம் எப்போதும் இருக்க வேண்டும்.

·         டூத் பிரஷ், பேஸ்ட், டவல், சோப்பு, எண்ணெய், கேர் கிளிப் போன்றவை கர்ப்பிணிக்கு மட்டுமே என பிரத்யேகமாக எடுத்துவைக்க வேண்டும்.

·         தளர்வாக இருக்கும்படி கர்ப்பிணிக்கான இரவு மற்றும் பகல் உடைகள் மற்றும் குழந்தைக்கு தேவையான குட்டியூண்டு சட்டை, டயபர் போன்றவை தயாராக இருக்க வேண்டும்.

·         இன்று செல்போன் இல்லாத நபரை பார்க்கமுடியாது. அதனால் செல்போன், சார்ஜர், தேவையெனில் பாட் போன்றவையும் கர்ப்பிணிக்குத் தேவைப்படும்.

பிரசவம் நெருங்கிவிட்ட நேரங்களில் எப்போதும் ஒரு நபர் கர்ப்பிணியுடன் இருக்கவேண்டும். எந்த காரணத்துக்காகவும் கர்ப்பிணியை தனியேவிடக் கூடாது. இந்த நேரத்தில் கர்ப்பிணிக்கு பிடித்தமான உணவு செய்துகொடுக்க அல்லது வாங்கிக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற ஏற்பாடுகள் கர்ப்பிணியின் பிரசவ அனுபவத்தை சுகமாக மாற்றிவிடும்.