சீனாவில் கெரோனா வைரஸ் தாக்குதல் எப்படியுள்ளது? ஒரு நகரமே துண்டிக்கப்பட்ட கொடூரம்.

பாம்பு, பல்லி, ஓணான் என்று கண்ணில் கண்டதை எல்லாம் சாப்பிட்டு, இப்போது கெரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி கிட்டத்தட்ட 150 மக்களை இழந்து நிற்கிறது சீனா.


இந்த நிலையில் சீனாவில் கெரோனா தொற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான, வூஹான் என்ற நகரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், கெரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வூஹய் மாகாணத்தை சேர்ந்த வூஹான் பெரு நகரத்தில் வாழும் கிட்டத்தட்ட 1 கோடி மக்கள், இந்த உலகை விட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நகரத்தின் உள்ளே செல்லவும், வெளியே வரவும் யாருக்கும் அனுமதி கிடையாது.

அந்த நகரத்தில் இருந்து ரயில், பேருந்து, படகு மற்றும் விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. அங்கு வாழும் குழந்தைகள், முதியோர், பிறந்த சிசுக்கள், மனநலம் குன்றியோர், கர்ப்பிணிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே மரண பயத்தில் வாழ்வதாக தெரியவந்துள்ளது. 

அந்த நகரத்திலிருந்து இணையதள வசதியும் துண்டிக்கப்பட்டதால், உயிருடன் வாழும்போதே வேறு மனிதர்களை சந்திக்க முடியாமல் அந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இது போன்ற கொடும் தொற்று நோய் பரவும் சூழ்நிலையில் ஒரு பெரும் நகரத்தை தனிமைப்படுத்துதல் அவசியம் என்றுதான் சொல்லப்படுகிறது.  

இப்படியொரு நிலைமை நமக்கு வராமல் இருக்கட்டும்.