சிசேரியன் செய்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த டாக்டர்கள்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.


குழந்தை பிறந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் துணி இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இச்சம்பவம் மருத்துவத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூரியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஓசூர் அரசு  மருத்துவமனையில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து இரண்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில் அவருக்கு கடுமையான வயிற்றுவலி வந்துள்ளது. இது சாதாரணம் வயிற்று வலிதான் என எண்ணி கவிதாவும் அலட்சியமாக இருந்துள்ளார். 

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று வயிற்று வலிக்காக மருந்து வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் சில நாட்கள் வயிற்று வலி குறைவாகவே இருந்தது இந்நிலையில் சென்ற வாரம் வயிற்று வலி கடுமையான போது அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த அவர்கள் வயிற்றில் துணி இருப்பதை கண்டறிந்தனர். 

பிரசவத்தின் போது வயிற்றில் உள்ள துணி தெரியாமல் வைத்து தைத்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் கவிதாவின் உறவினர்களுக்கு தெரிய வரவே  ஆத்திரமடைந்த கவிதாவின் உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்தார் மருத்துவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னரே அங்கு உள்ள கூட்டம் கலைந்து சென்றது. பிறகு சிறிது நேரம் அப்பகுதியில் சாலை போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.