சைக்கிள் கூட நுழைய முடியாத இடம்..! உள்ளே புகுந்த ஹோண்டா சிபிஆர் பைக்! ஆனால்?

அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சைக்கிள் கூட செல்ல முடியாத இடத்தில் வேகமாக நுழையும் பதற்றமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து சில நாட்களுக்கு முன்னர் சட்டம் நிறைவேற்றியது. சாலை விதிகளை மீறுவோருக்கு பல மடங்கு அபராதம் உயர்த்தப்பட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களில் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய அபராத கட்டணம் பல்வேறு மாநிலங்களில் குறைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்றும் புதிய கட்டண விகிதம் அமலுக்கு வரவில்லை. 

இந் நிலையில், இருசக்கர வாகனம் ஒன்று சைக்கிள் கூட நுழைய முடியாத இடத்தில் அதிவேகமாக சென்று இடித்து நிற்பது போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த ஹோண்டா சிபிஆர் 250ஆர் வேகமாக செல்லும் காட்சிகளை படம்பிடித்தது வேறு யாரும் அல்ல. அதை ஓட்டியவர்தான் என்பது அதிர்ச்சியான விஷயம். ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் அந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த இளைஞர் அப்படி வாகனத்தை ஓட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏன் என்றால் 103 கிலோமீட்டர் வேகத்தில் சென்று விபத்தில் சிக்கிய இளைஞருக்கு சிறிய காயமே ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும்போது அந்த இளைஞர் நிச்சயம் படுகாயம் அடைவார் என்று ஆவலோடு அதிர்ச்சியில் பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் ஹோண்டா சிபிஆர் பைக்கரின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற செயல்களால்தான் பல மடங்கு பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத்துடன் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.