ஓரினச் சேர்க்கை என்றாலே அது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால் அதில் ஈடுபடுபவர்களையும் இந்த சமூகம் தவறான மனிதர்களாகவே பார்க்கிறது.
ஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் வன்கொடுமையில் இறங்குகிறார்களா..? மனநல கழகம் ஆய்வறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா?

ஓரினச்சேர்க்கை என்பது ஆரம்பத்தில் இருந்து வருவதில்லை. ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படும் ஈர்ப்பினால் வருவது. சிலர் விரும்புவர். சிலருக்கு அது அசிங்கமாக படும். ஒருவகையில் ஓரினச் சேர்கை மனவியாதி என்று கூட சொல்லப்படுவதுண்டு.
ஓரினச் சேர்க்கை என்பது ஒரு மனக்குறை அல்ல என அமெரிக்கன் மனநல கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுவாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் தன்னுடைய இணையை எதிர்பாலினமாகத்தான் கருதுவார்கள் என சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.
அதேபோல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்தான், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள் என்றும் ஒரு சிலரால் நம்பப்படுகிறது. ஆனால் இதில் உண்மையில்லை. ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் கொண்டவர்கள், பெரும்பாலும் உடலுறவுக்காக மட்டுமே அணுகுவர்கள். ஹெட்ரோ செக்ஸுவல் என்பது எதிர்பாலினம் மீது ஈர்ப்பு கொண்டவர்களை குறிக்கிறது.
இது யாரும் தீர்மானிக்க முடியாது. இயல்பிலேயே வரும் விருப்பமான இதனை குறைவான புரிதல்களால் தவறான விஷயங்களை நம்ப வேண்டாம். தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களின் பழக்க வழக்கங்கள்,வாழ்க்கை முறையே விசித்திரமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது உண்மையல்ல பிறரைப் போல மிகவும் சாதரணமான அன்றாட வாழ்க்கையைத் தான் அவர்களும் வாழ்கிறார்கள். விசித்திரமான எந்த பழக்கங்களும் அவர்களை தனித்துவம் படுத்துகிற மாதிரி இருக்காது.