ஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்..! இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்..! அதிர வைக்கும் காரணம்!

வாட்ஸ் ஆப்பில் வந்த வதந்தியை நம்பி அரசு அதிகாரிகளும், போலீசும் சேர்ந்து 300 இஸ்லாமிய குடும்பத்தினரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய மட்டமான சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.


விஷமிகள் சிலர் அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் தவறான தகவல்கள் பரப்பி , அதனால் ஏற்படும் தீயில் குளிர்காய்ந்து வருகின்றனர். ஆனால் வாட்ஸ்ஆப்பில் வந்த வதந்தியை நம்பி அரசு அதிகாரிகளே இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்து அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  

இந்த சட்டத்தில் இலங்கையில் இருந்து வந்த ஈழத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக திருத்தங்கள் செய்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந் நிலையில் பெங்களூரில் வசிக்கும் இஸ்லாமியர்கள், அம்மாநில பாஜக அரசால் குறி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் பெலந்தூர் ஏரி அருகே வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்களின் 300 குடும்பங்கள் வசிப்பதாக வாட்ஸ்ஆப்பில் சில விஷமிகள் வதந்தி பரப்பியுள்ளனர்.

முறையின்றி குடியேறியதாக கூறி 300 வீடுகளை போலிஸ் உதவியுடன் அரசு அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதற்கு மறுப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள், நாங்கள் இந்தியர்கள்தான் எங்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் உள்ளது. ஆனால் எங்கள் வீடுகளை இடித்துள்ளனர் என்று வேதனையுடன் தெரிவித்தனர். வங்கதேசம் எங்கே இருக்கிறது என்று கூட எங்களுக்குத் தெரியாது.

வடஇந்தியர்களும் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் இங்கே வாழ்கிறார்கள். இந்நிலையில் எல்லோருடைய வீடுகளையும் இடித்து உள்ளனர் என்கிறார்கள் அப்பாவி மக்கள். இந்த நிலையில் ஆவணங்களை பரிசோதனை செய்த அதிகாரிகள், அவர்கள் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.