கருவளையம் உங்கள் முக அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம், இப்படி பண்ணா கண்டிப்பா சரியாகிவிடும்!

முகத்தை சுற்றி கருவளையம் வருவது இயல்பானது. சிலருக்கு தூக்கம் பற்றாக்குறை யாக இருந்தால் வரும். இன்னும் சிலருக்கு அதிக மன உளைச்சல் காரணமாகவும் வரும்.


முதலில் கண்களை சுத்தமான நீரில் கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான காட்டனை எடுத்து பன்னீரில் நனைத்து கண்களின் மீது வையுங்கள். கண்களுக்கு குளிர்ச்சியையும், கண்ணுக்கு கீழ் இமைகளில் உண்டாகும் வீக்கத்தையும் வரவிடாமல் செய்யும். 5 நிமிடங்கள் வரை வைத்து இந்த காட்டனை அகற்றிவிடுங்கள்.

குளிர்ந்த கலவையான வெள்ளரி தக்காளியின் சாறை எடுத்து கண்களின் மீது ஒரு மெல்லிய துணியை வைத்து அதன் மீது அந்த கலவையை தடவ வேண்டும் சற்று கனமாக போடவேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மெதுவாக அந்த கலவையை எடுத்து பிறகு கண்களில் மாற்றத்தை காணலாம்.

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள். தொடர்ந்து 3 நாள் உருளைக்கிழங்கை பயன்படுத்தினாலே கருவளையத்தின் நிறம் மங்க தொடங்கும்.

வாய்க்கு புத்துணர்ச்சி தருவதை போலவே கண்களுக்கும் புத்துணர்ச்சி தருகிறது புதினா. புதினாவை மண் போக சுத்தம் செய்து இலேசாக நீர் தெளித்து மைய அரைக்க வும். இதில் காட்டனை கண்களில் வைப்பதற்கு ஏதுவாக உருட்டி புதினா நீரில் ஊறவிட்டு ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். பிறகு அதை எடுத்து கண்களில் மீது கண்களை சுற்றி ஒற்றி ஒற்றி எடுத்தபடி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து மசாஜ் செய்யும் போது கருவளைய கருப்பு மங்க தொடங்குகிறது.