2 குழந்தைகளுக்கு தாயான டிவி நடிகைக்கு நடு ரோட்டில் 14 ஆண்களால் நேர்ந்த விபரீதம்!

பாலிவுட் சின்னத்திரைகளில் மிக புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் சஹாட் கன்னா இவருக்கு தற்போது 32 வயதாகிறது.


இவர் மும்பையைச் சேர்ந்தவர். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து டெலிவிஷன் துறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையின் மாலையில் சஹாட் கன்னா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்பவர் ஆகியோர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவரது காரின் பின்னால் இருந்து 4 பைக்கில் அந்த எட்டு பேர் மற்றும் ஒரு காரில் வந்த 6 பேர் குடித்துவிட்டு இவரது காரின் மீது மோதியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த சஹாட் கன்னா அவர்களை கண்டபடி திட்டி உள்ளார். இதனால் கடுப்பான அவர்கள் தங்களது பைக்கை வைத்து காரை நன்றாக இடித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆண்கள் அனைவரும் நடிகையை சூழ்ந்து கொண்டு அவரை செல்ல விடாமல் தடுத்துள்ளனர். பின்னர் எப்படியாவது இந்த இடத்திலிருந்து செல்ல வேண்டும் என தனது டிரைவரை காரை எடுக்கச் சொல்லி அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். இப்படியாக ஹோலி பண்டிகையின் போது குடித்துவிட்டு ரகளை செய்தவர்களிடம் இருந்து தப்பி உள்ளார் சஹாட் கன்னா.