நயன்தாராவுக்கு ஆதரவாக களமிறங்கிய இந்தி நடிகைகள்! பதற்றத்தில் ராதாரவி!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராதாரவிக்கு எதிராக தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி நடிகைகளும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.


கொலையுதிர் காலம் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி நடிகை நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசி இருந்தார். சீதை போன்ற கடவுள் வேடங்களில் நடிக்கும் நடிகைகளை பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் என்று தோன்ற வேண்டும் என ராதாரவி அப்போது தெரிவித்திருந்தார்.

முன்பெல்லாம் கடவுள் வேடங்கள் என்றால் கே ஆர் விஜயா போன்ற நடிகைகளை தான் அழைப்பார்கள் என்று கூறிய ராதாரவி ஏனென்றால் கே ஆர் விஜயா வைப் பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் போல் தோன்றும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதெல்லாம் பார்த்தவுடன் கூப்பிட தோன்றும் நடிகைகளை கடவுள் வேடத்தில் நடிக்க வைப்பதாக ராதாரவி கூறியிருந்தார்.

அதாவது தெலுங்கு திரைப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதை குறிப்பிட்டு ராதாரவி இப்படி தெரிவித்திருந்தார். ராதாரவியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழ் நடிகைகள் பலரை குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகின்றனர். 

ஆனால் இந்துக்கள் பிரபலமாக இருக்கும் நடிகைகள் டாப்சி ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் ராதாரவிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். நயன்தாரா போன்று முன்னணியில் இருக்கும் பிரபல நடிகையையே ராதாரவி இப்படி பேசுகிறார் என்றால் வளர்ந்து வரும் நடிகர்களே அவர்கள் எப்படிப் பேசுவார் என்று டாப்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராதாரவி விவகாரத்தில் உரிய நடவடிக்கை என்பது அவரை இனி எந்தப் படங்களிலும் ஒப்பந்தம் செய்யாமல் இருப்பதுதான் என்று இந்தித் திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேபோல் பாகுபலியில் பல் வால் தேவனாக நடித்துள்ளார் ராணா டகுபதியும் ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் துறை இலக்கையும் தாண்டி ராதாரவிக்கு கண்டனம் மறுத்து வருவதால் திரைப்படங்களில் அவர் நடிக்க தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் தடைவிதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ராதாரவி பதற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.