விடை தெரியாத ஸ்ரீதேவியின் மரணம்! மர்மத்திற்கு போதை தான் காரணமா?

நடிகை ஸ்ரீதேவி சிவகாசியில் உள்ள மீனம்பட்டி எனும் கிராமத்தில் கடந்த 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் சிறு வயதிலேயே இவர் பெற்றோரை இழந்தார் .


இவருடைய 4வது அகவையிலேயே கந்தன் கருணை என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

அதற்குப்பின் தமிழ் சினிமாவில்   1976 ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி முதல் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார் . 

இதற்குப் பின் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக திரைத்துறையில் திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவை அடுத்து ஹிந்தி கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜான்வி மற்றும்  குஷி மற்றும் என இரு  மகள்கள் உள்ளனர் .

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய  உறவினர்களின் திருமணத்திற்காக துபாய் சென்றிருந்தார். அப்போது அவர் அங்கிருந்த ஒரு பிரசித்திப்பெற்ற ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதிகமான மது போதையுடன் ஹோட்டல் ரூமுக்கு சென்று இருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

மது போதையின் காரணமாக பாத்ரூமில் இருந்த பாத்டப்பில்  விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக செய்திகள் பரவின. இருப்பினும் பலரும் இதனை ஒரு திட்டமிட்ட கொலையாக தான் இருக்கக்கூடும்  என்றும் கூறிவருகின்றனர்.

இதற்குப்பின் ஸ்ரீதேவியின் உடல் துபாய்  பொலிஸாரால் கைப்பற்றப் பட்டது .  அதனை பிரேத பரிசோதனைக்காக துபாயில் இருந்த ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டது.

 அதற்குப்பின் பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளிவந்தது. அறிக்கையில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது .

கடைசியில் ஸ்ரீதேவி மரணம் கொலை அல்ல விபத்து என்பது உறுதியாகி அவரது உடல் தனி விமானம் தின் மூலம் துபாயில் இருந்து மும்பைக்கு வரவழைக்கப்பட்டது. 

பின்னர் தக்க மரியாதைகளுடன் மும்பையில் இருந்த ஒரு மின் மயானத்தில் ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்பட்டது.

எனினும் ஸ்ரீதேவியின் மரணத்தில் இருக்கும் மர்ம  முடிச்சுகள்  இன்னமும் அவிழ்க்கப்படவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.