ஹீரோயின் ஓவர் டார்ச்சர்! சீரியலை சீக்கிரம் முடித்துவிட்டோம்! கதறும் தயாரிப்பாளர்!

சென்னை: ஹீரோயின் டார்ச்சரால்தான் சீரியலை முடிக்க நேரிட்டதாக, வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் குழுவினர் புலம்பி வருகின்றனர்.


இதுபற்றி அந்த சீரியலின் தயாரிப்பாளர் உதய்சங்கர் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், ''சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது, அனன்யா மிக அமைதியாக இருந்த பெண் சார். ஆரம்பத்தில் சொல்வதை கேட்டு நடித்து வந்தவர், 30 எபிசோட்கள் கடந்த நிலையில் படிப்படியாக தனது அகம்பாவத்தை காட்ட தொடங்கினார்.

100 எபிசோட்கள் கடந்த பின் நடவடிக்கையே மிக மோசமாக மாற தொடங்கியது. நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட் வருவதில்லை.  தொழிலில் சரியான அர்ப்பணிப்பு இல்லை. நாளுக்கு நாள் அந்த பெண்ணின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் எல்லை மீறி போனது. அவரை உடனே மாற்றும்படி சேனல் நிர்வாகத்திடம் கேட்டோம். 

ஆனால், சேனல் நிர்வாகம் ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, வேறு வழியின்றி, சீரியலையே விரைவில் முடித்துவிட்டோம். எங்களைப் போல நிறைய பேர் இப்படி ஹீரோ, ஹீரோயின் தொல்லை தாங்காமல் சீரியலை விரைவாக முடிக்க நேரிடுகிறது. இல்லை எனில், வெளியே சொல்ல முடியாமல் நொந்து போய் உள்ளனர்.

சீரியல் இயக்குனர், தயாரிப்பாளரை விடவும் அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் தொல்லைதான் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்,'' என்று புலம்பி தள்ளியுள்ளார். இதுபற்றி அனன்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''ஒரே சோகமாக வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் சென்றுகொண்டிருந்தது.

அதனை சற்று மாற்றும்படித்தான் தயாரிப்பாளரிடம் கேட்டேன். மத்தபடி என் மீது அவருக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நன்றாகத்தான் என்னிடம்பேசி வந்தார். திடீரென இப்படி குற்றம் சாட்டுவது எனக்கு வியப்பாக உள்ளது,'' எனக் கூறியுள்ளார். மொத்தத்தில், சினிமாக்காரர்களை விட சீரியலில் ஏராளமான 'அமைதிப்படை' மணிவண்ணன்களும், சத்யராஜ்களும் வாழ்வார்கள் போல.